தெனாலி ராமன் படத்தைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’எலி’. இப்படத்தையும் யுவராஜ் தயாளன் இயக்க ஹிரோயினாக சதா மற்றும் பிரதீவ் ராவத், ஆதித்யா மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்க சிட்டி சினி கிரியேஷன் படத்தினைத் தயாரிக்கிறது.
’எலி’ படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சந்திப்பில் அவர் பேசுகையில், 1960களில் நடக்கும் கதை. சுதந்திரம் பெற்ற பின்பு நடக்கும் சம்பவமாக கதைக் களத்தினை உருவாக்கியுள்ளோம். போலீஸ் அனுப்பும் அண்டர் கவர் அதிகாரியாக நடித்திருக்கிறார் வடிவேலு. கள்ளக் கடத்தல் செய்யுற கும்பலில் நுழைந்து அவர்களையே பிடிக்க நினைக்கும் ஒற்றர் தான் வடிவேலு. ஒரு நல்ல கும்பலில் கெட்டவன் நுழைந்தால் அவனை கருப்பு ஆடு என்பார்கள். அது போல கெட்ட கும்பலில் நல்லவன் ஒருவன் நுழைந்தால் அவனை எலினு தான் சொல்லுவாங்க. அப்படி மாட்டிக்கிற எலியை பிடிக்க நினைத்தால் அவ்வளவு தான். அந்த எலி நம்மளையே பாடா படுத்தி எடுத்துரும். அப்போ நடக்குற காமெடி கலாட்டாதான் ’எலி’ படத்தோட ஒன் லைன்.
சதா பப் டான்ஸராக வருகிறார். இருவருக்குமான காதல் கூட ரொமான்ஸாக இல்லாமல் காமெடியாகவெ அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு வேடம் தான் வடிவேலுவுக்கு, ஆனால் ஒரு ஸ்பை நிறைய கெட்டப் போடுவாங்க. அது மாதிரில் நிறைய கெட்டப்பில் வருகிறார். முக்கியமாக அமெரிக்கன் ப்ளாக் கெட்டப் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
வீட்டுக்குள்ள நுழைந்த எலியைப் பிடிக்கப்போனால் நம்ம வீடே ரெண்டாகிடும். அது போல தான் எதிரிகளிடம் சிக்கிய வடிவேலு தன்னை காப்பாற்றிக் கொள்ள சண்டைப் போடாமல் தப்பிக்கும் போதே எதிரிகள் டயர்ட் ஆயிடுவாங்க. அப்படி படத்துல இரண்டு சண்டைக் காட்சிகள் இருக்கு.
வித்யாசாகர் இசையில் நீண்ட நாளுக்குப் பிறகு வடிவேலு ஒரு பாடல் தன் குரலில் பாடியுள்ளார். மேலும் இரண்டு பாடல்களும் இப்படத்தில் உள்ளது. 1960 கதை என்பதால் பாடலை கணமாக உருவாக்கியிருக்கிறாராம் வித்யாசாகர். ஜன்னல் ஓரம் படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மட்டும் இசையமைத்துவந்தவர், ’எலி’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தோட்டா தரணி கலையில் பிரம்மாண்டமான செட் அமைத்துக் கொடுத்துள்ளார். 1960 கதை என்பதால் முழுக்க முழுக்க செட் போட்டே படப்பிடிப்பு நடத்தினோம். மேலும் சிறப்பாக வடிவேலுவும் சதாவும் நடனமாடும் காட்சிக்கு 1கோடியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். மற்ற காட்சிகளுக்கு கிராபிக்ஸும் கை கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமில்ல, வடிவேலுவுக்கு எலிய கண்டாலே ஆகாது. ஆனா அவரையே எலியா நடிக்க வைச்சாச்சி. நிச்சயம் எலிக்கும் அவருக்கும் இப்பவும் செட் ஆகும். ஹிட் அடிக்கும் என்று முடித்தார் யுவராஜ். இது தவிர்த்து படப்பிடிப்பின் போது வடிவேலு சீன்களில் தலையிடுவார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது? கண்டிப்பாக இல்லை. அப்படி யாரும் சிந்தித்தால் அது தவறு. ஒரு காட்சியை நாம் விவரித்தவுடன் அதைப் பற்றியே சிந்திப்பார். பின் சில ஆலோசனைகள் கூறுவார் நாம் யோசிப்பதைக் காட்டிலும் அவர் மிகவும் சிறப்பாக சிந்திப்பார். ஆலோசனை நன்றாக இருக்கும் பட்சத்தில் மாற்றிக்கொள்வதில் தவறேதும் இல்லையே என கூறினார்
0 comments:
Post a Comment