கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்களை, பகல் கொள்ளையர்களாக மாறி கழுத்தில் கத்தியை வைக்காத குறையாய் பணத்தைப் பிடுங்குகிறார்கள் திரையரங்கு அதிபர்கள்…
கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தை மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போஸ்.
இந்த நிலையில், 1 கோடி ரூபாய் கமிஷன் கொடு.. இல்லை என்றால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டல்விடுத்திருக்கிறார் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரான ‘ரோகிணி’ பன்னீர் செல்வம்.
‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் கமலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் காம்படிஷன் கமிஷனில் வழக்கு தொடர்ந்தார் கமல்.
அந்த வழக்கில் தியேட்டர் அதிபர்களுக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.
எனவே வழக்கை வாபஸ் வாங்கும்படி கமலிடம் கோரிக்கை வைத்தனர் தியேட்டர் அதிபர்கள்.
ரியல் ஹீரோவான கமல் அதற்கு மறுத்துவிட, அவரை வைத்து படம் எடுத்துள்ள சுபாஷ் சந்திரபோஸை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் தியேட்டர் அதிபர்கள்.
கணிசமான தொகையை கமிஷனாக கொடுத்தால்தான் உத்தமவில்லன் படத்தை ரிலீசுக்கு அனுமதிப்போம் என்கிறார்களாம்.
குறிப்பாக, கோயம்பேடு ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் தனக்கு 50 லட்ச ரூபாயும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கு 50 லட்ச ரூபாயும் என மொத்தம் 1 கோடி ரூபாயைக் கொடுத்தால்தான் உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
அவர் கேட்ட தொகையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போஸ் “நானே ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் சார்… கொஞ்சம் மனசு வையுங்க…” என்று கேட்க, “உங்க படம் ரிலீஸ் ஆகணும்னா கேட்டதைக் கொடு, இல்லன்னா எப்போ உனக்கு பணம் கொடுக்க முடியுமோ அப்போ படத்தை ரிலீஸ் பண்ணிக்க..” என்று நக்கடித்திருக்கிறார் ‘ரோகிணி’ பன்னீர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் போஸ் இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி எஸ்.தாணுவின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, தாணு “இது என்ன அநியாயம்? வாங்க போய் பேசலாம்.” என்று சுபாஷ் சந்திர போஸைக் கூட்டிக்கொண்டு பன்னீரின் தி.நகர் ‘ரோகிணி’ லாட்ஜுக்குப் போயிருக்கிறார்.அங்கே பன்னீருடன், மதுரை அண்ணாமலையும் இருந்தாராம்.
அவரிடம் வழக்குக்கு செலவான தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்க”, என்று தாணு கேட்டிருக்கிறார்.
மதுரை அண்ணாமலையோ, “எங்கள் சங்கத்திற்கு ஐம்பது லட்ச ருபாய்க்கு ஒரு பைசா குறைவா கொடுத்தாலும் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்,” என்று கூறிவிட்டு டமால் என கதவைச் சாத்தி தாணுவை அவமானப்படுத்தி இருக்கிறார்.
எப்படியாவது சிக்கல் தீர்ந்தால் போதும் என்று நினைத்த போஸ், பன்னீருக்கு நெருக்கமான படூர் ரமேஷ் என்பவர் மூலம் பன்னீருடன் மீண்டும் பேசியுள்ளார்.
அப்போது பன்னீருக்கு 50 லட்சம், சங்கத்துக்கு 20 லட்சம் என்று முடிவாகியிருக்கிறது. முதல் கட்டமாக அடுத்த நாளே 25 லட்ச ரூபாயை கடன் வாங்கி பன்னீருக்குக் கமிஷனாகக் கொடுத்த போஸ், மீதியை பிறகு புரட்டித் தருவதாக கூறியிருக்கிறார்.
பன்னீர்செல்வமோ தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.
இதனால் எரிச்சலான தயாரிப்பாளர் போஸ் 50 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிப் படமெடுத்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே..? என்கிற மனக்கஷ்டத்தில் திரையுலகில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் கூறி இருக்கிறார்.
இதற்கிடையே சுபாஷ் சந்திர போஸ் மேற்கொண்டு பணம் கொடுக்காததால், கடுப்பான ரோகிணி பன்னீர் செல்வம், தனக்கு விசுவாசிகளாக உள்ள சில தியேட்டர்காரர்களை அழைத்து, உத்தம வில்லன் படத்துக்கு ரெட் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான், உட்லன்ட்ஸ் தியேட்டரில் திரையரங்க உரிமையாளர்களின் பொதுக்குழு கூடியிருக்கிறது. அப்போது விருதுநகர் அப்சரா தியேட்டர் ரத்னகுமார், அருப்புக்கோட்டை இளையராணி மகாராணி தியேட்டர் உரிமையாளர் தங்கபாண்டியன், சோழவந்தான் ‘ஏ’ தியேட்டர் உரிமையாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் பன்னீரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் பறிப்பு பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
உடனே ‘ரோகிணி’ பன்னீர் எந்த பதிலும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு ஓடி விட்டாராம். இதனால் கடுப்பான 100க்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் ‘ரோகிணி’ பன்னீரை சங்கத்தின் எந்தப் பொறுப்பிலும் வைக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதோடு ‘ரோகிணி’ பன்னீர் லீசுக்கு விட்டிருக்கும் ‘ரோகிணி’ தியேட்டர்களுக்கும் இனி எந்தப் படங்களையும் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.
கொம்பன் விவ
0 comments:
Post a Comment