சமீபகாலமாகவே நடிகர்கள் தங்களின் ரசிகர்களுடன் டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் ஆகியவற்றில் உரையாடி வருவது வழக்கமாகி வருகின்றது. சமீபத்தில் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் தங்களின் ரசிகர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இப்படி பேசி வந்தனர்.
அந்த வரிசையில் நடிகர் விஷாலும் இணைந்துள்ளார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் விஷால்.
அபோது ஒரு ரசிகர், ’ஒரே நேரத்தில் விஜய்யை இயக்கவும், இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டார்.
அதற்கு விஷால், ‘கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் நிச்சயம் ஷங்கர் சாருக்கு நோ சொல்லிவிட்டு, விஜய்யை வைத்து படத்தை இயக்க சென்றுவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய் படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் துப்பாக்கி தானாம்.
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ என்ற படத்தில் காஜல் அகர்வாலுடன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment