‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்தபோது பிரசன்னா, சினேகா இருவரும் காதலித்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் 2012 மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். ‘உன் சமையல் அறையில்’ படத்துக்குப் பிறகு சினேகா வேறு படங்களில் நடிக்கவில்லை. அவர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுபற்றி பிரசன்னா, ‘விரைவில் எங்கள் வீட்டுக்கு புதிய உறுப்பினர் ஒருவர் வர இருக்கிறார். அவரை வரவேற்க மிகுந்த ஆவலாக இருக்கிறோம்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘ஆகஸ்ட் மாதம் சினேகாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அப்பாவாகப் போகும் அந்த நாளை எதிர்பாத்துக் காத்திருக்கிறேன்’ என்றார்.
அம்மா ஆகிறார் சினேகா
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment