ஸ்ரீதிவ்யா அறிமுகமான காட்டுமல்லி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதையடுத்து நடித்த நகர்ப்புறம் வெளியாகும்முன், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவர் நடித்தது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கா இப்படியொரு முன்னணி நடிகை அந்தஸ்து என்ற ஆச்சரியம் இன்னும் அவர் முகத்தில் வழிகிறது.
தனக்குப் பிடித்தமான நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர்களை சொல்லி வந்தவர் இப்போது சிவ கார்த்திகேயன் பெயரையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சிவ கார்த்திகேயனின் மார்க்கெட் படத்துக்குப் படம் அதிகரிப்பதைப் பார்த்து ஏற்பட்ட மாற்றம் இது.
இப்போதைய நடிகர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்றோ, பொருத்தமானவர் எவர் என்றோ ஸ்ரீதிவ்யாவிடம் கேட்டால், அசராமல் அவர் சொல்வது சிவ கார்த்திகேயனின் பெயரைதான்.
பிழைக்கத் தெரிந்தவர்.
அட, இது எப்போதிருந்து…?
Views:
0 comments:
Post a Comment