ஐ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும், அந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது என்றும் கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வெளிவந்தன. உண்மையேலே இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டியதாம்.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது இந்தி திரைப்படமான 3 இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார். இதற்காக ஷங்கரும் ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், லிங்கா திரைப்படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் ஷங்கருடன் மாஸ் கூட்டணி வைக்க திட்டமிட்ட ரஜினிகாந்த், போன் மூலம் ஷங்கருக்கு தகவல் கூறியுள்ளார். இதையடுத்து தனது பிளானை மாற்றிய ஷங்கர், ரஜினி இமேஜுக்கு தக்கபடி திரைக்கதையை மாற்றியதாக கூறப்படுகிறது.
எனவே இப்படத்தில், கமலை வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் ஷங்கர். ஆனால், அவர் மறுக்கவே, மீண்டும் தனது பழைய பிளான்படி விக்ரமை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment