இந்த வருடம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ’ஐ’ படம். விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படம் வெளிவருவதற்கு முன்பு இதன் பட்ஜெட் 150 கோடி என்றும், 200 கோடி என்றும் ரசிகர்களிடையே கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் ஷங்கர் ’ஐ’ படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான் என்று கூறினார். ஆனால் ஐ படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.தற்போதெல்லாம் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துச் சொல்வது ரசிகர்களிடையே வழக்கமாகி வருகிறது. சராசரியாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பட்ஜெட்டை 60 கோடி முதல் 70 கோடி வரை ஆகிறது என்று படத்தின் வியாபாரத்திற்கு முன் செய்திகளை கசிய விடுகிறார்கள். ஆனால், அந்தப் படங்களுக்கு அதில் பாதி அளவுதான் செலவு செய்திருப்பார்கள் என்றும் அது பற்றி விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இப்போது விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் பட்ஜெட் சுமார் 120 கோடி என சில நாட்களாக ஒரு தகவலை வெளியில் விட்டிருக்கிறார்கள். படத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக 5 கோடி, ஒரு பாடலுக்கு 5 கோடி, எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் என அதற்கு சில பல கோடிகள் என படத்தின் மற்ற தயாரிப்புச் செலவுகள், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா சம்பளம் என மொத்தமாக 120 கோடியை கணக்காகச் சொல்கிறார்களாம். உண்மையிலே அவ்வளவு செலவு செய்து எடுத்தால் அதை எப்படி வசூலிக்க முடியும் என்றும் ஒரு கேள்வி எழும்.
புலி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா..? அடுத்த ஐ படமோ..?
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment