கௌதம் மேனன் படங்கள் என்றாலே திரையரங்கிற்கு நம்பி போகலாம் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட இவருடைய இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களையும் தாண்டி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் சமீபத்தில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பேசிய மாணவர் ஒருவர் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்று கேட்டார்.
இதற்கு கௌதம் ‘விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும். அவ்வாறு அமைந்தால் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன்’ என்று கூறியுள்ளார்.
விஜய் என்னை நம்ப வேண்டும்- மனம் திறந்த கௌதம் மேனன்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment