விஜய், காஜல் அகர்வால் நடித்து 2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பாக வெளியான படம் ‘ஜில்லா’. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ரீமேக் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் போகவே தற்போது படம் தெலுங்கில் நேரடியாக டப்பாகி வெளியாக உள்ளது.
சமீபத்தில், ’ஜில்லா’ படத்தை இயக்கிய நேசனே தெலுங்கு ரீமேக்கை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பின் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதில்லை என அதன் ரீமேக் உரிமையை வாங்கிய நிறுவனமே அறிவித்தது. அதற்குப் பதில் ’ஜில்லா’ தெலுங்கில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
இதே பாணியில் ’கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கும் இழுபறியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்வாங்கிய ’ஜில்லா’ ரீமேக் திட்டம்
Views:
0 comments:
Post a Comment