எனது கனவுக்கன்னி நயன்தாரா தான் என்று விஜய் சேதுபதி ஓபனாகவே கூறியுள்ளார். அவருடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டவருக்கு தனுஷ் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஹீரோயின் நயன்தாரா தான். தனது கனவுக்கன்னி என்பதால் அவர் கால்ஷீட் எப்போ கொடுகின்றாரோ அப்போதெல்லாம் நான் கால்ஷீட் கொடுக்கின்றேன் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
இதுவரை மற்ற படங்களில் தான் கொடுத்த கால்ஷீட்டில் சரியாக நடித்துக் கொடுத்த விஜய் சேதுபதி, நயன்தாரா படத்திற்கு கேட்டபோதெல்லாம் கால்ஷீட் கொடுத்துள்ளதால், மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் நடிக்காமல் தவிர்த்து வருகின்றாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.
நயன்தாராவுக்காக ஓரங்கட்டிய விஜய் சேதுபதி!! கடுப்பில் தயாரிப்பாளர்கள்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment