விமானத்தில் சத்தமாக போனில் பேசிக் கொண்டு வந்த ஆந்திர அமைச்சரிடம் கடுமையாக சண்டை போட்டு போனை ஆஃப் பண்ண வைத்தார் நடிகை ஸ்ருதிஹாஸன்.
புலி படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாஸன் தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் முகாமிட்டுள்ளார்.
‘நீ ஆந்திர மந்திரியா இருந்தா எனக்கென்ன.. ஆஃப் பண்ணு போனை!’- ‘அசால்ட்’ ஸ்ருதிஹாஸன்
தலைக்கோணம் நீர்வீழ்ச்சி பகுதியில் ரூ.1 கோடி செலவில் அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர்.
படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு எடுத்து திருப்பதி செல்ல திட்டமிட்டார். ஹைதராபாத் சென்று அங்கிருந்து விமானத்தில் திருப்பதி புறப்பட்டார். அதே விமானத்தில் ஆந்திர அமைச்சர் ஒருவரும் வந்துள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கு முன் வரிசையில் ‘சீட்’ ஒதுக்கப்பட்டு இருந்தது. அவருக்குப் பக்கத்து சீட்டில் அமைச்சர் அமர்ந்திருந்தார்.
விமானத்தில் ஏறிய சிறிது நேரத்தில் போனை அணைத்து வைக்குமாறு கூறியும், அவர் யாருடனோ போனில் மிக சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இது எல்லோருக்கும் தொந்தரவாக இருந்தது.
எனவே போனை அணைத்து வைக்குமாறு ஸ்ருதி அவரிடம் கூறினார். ஆனால் ஸ்ருதியை நக்கலாகப் பார்த்தபடி, தான் ஒரு அமைச்சர் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஸ்ருதி, யாரா இருந்தா எனக்கென்ன.. விமான விதிப்படி நீங்கள் செய்வது தவறு. போனை ஆப் பண்ணுங்கள் என்றாராம் கடுமையாக. தொடர்ந்து இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். விமானப் பணிப்பெண்களிடமும் இதுகுறித்துப் புகார் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விமான பணிப் பெண்கள் அமைச்சரின் போனை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
0 comments:
Post a Comment