ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி வெளிவந்த ‘காஞ்சனா 2-’ படம் கடந்த வாரம் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் திரில் கலந்த பயத்துடன் எடுத்திருந்தார். ஆகவே, இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும்போது அவ்வளவாக ரசிக்க முடியாவிட்டாலும், படத்தில் அப்பாடல்களை காட்சிப்படுத்திய விதத்தை வைத்து பார்க்கும்போது பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது.
அந்த வரிசையில் இந்த படத்திற்கென்று ப்ரோமோ பாடல் எதுவுமில்லாதது படக்குழுவினருக்கு பெரிய வருத்தமாக இருந்து வந்தது.
அதனால், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘சில்லாட்ட பில்லாட்ட’ என்ற பாடலை ப்ரோமோ பாடலாக மாற்றி லாரன்ஸ், நித்யா மேனன், டாப்ஸி மூவரும் நடனமாட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
இந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் இருவரும் இணைந்து நடனமாடியிருந்தனர். தற்போது இந்த பாடலில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன் மூவரும் இணைந்து நடனமாடவிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment