அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ‘சிறுத்தை‘ சிவா இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். ஏற்கெனவே அஜித்தும்-சிவாவும் இணைந்து ‘வீரம்’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இவர்கள் இணையும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மே முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.
‘வீரம்’ படத்தில் அண்ணன்-தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுத்த ‘சிறுத்தை’ சிவா இந்த படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கவிருக்கிறாராம். இதற்காக அஜித்துக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு தங்கையாக முன்னணி நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்கவேண்டும் என்று விரும்பிய சிவா, இதற்காக ஸ்ரீதிவ்யா மற்றும் நித்யா மேனனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் இதுவரை எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறார்கள்.
ஸ்ரீதிவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படம் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், தல அஜித்துக்கு தங்கையாக நடிக்க யார் முதலில் ஓகே சொல்கிறார்களோ, கண்டிப்பாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.
இப்படத்தில் கதநாயாகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். ஏ.எம்.ரத்னம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்
0 comments:
Post a Comment