பள்ளிக்கூடம் போகும் போதே ’கும்கி’ படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். அந்தப் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
அதற்கு பிறகு தொடர் வெற்றிகளை கொடுத்து கோலிவுட்டின் ராசியான நடிகையாகவும், லக்கி நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கொம்பன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் லட்சுமி மேனன் அழகும், நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் லட்சுமி மேனன்.
அப்போது அவரிடம் தொகுப்பாளர் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என்று கேட்க, லட்சுமி மேனன் ‘அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் பிந்துமாதவி, ஹன்சிகா, நஸ்ரியா என்று பல நடிகைகள் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை கூறி இருக்கின்றனர். அவர்கள் சொன்னதை இதுவரை காதில் வாங்காத அஜித் லட்சுமி மேனன் சொன்னதையாவது காதில் வாங்குவாரா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
0 comments:
Post a Comment