காக்கி சட்டைக்குப் பிறகு சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படம், ரஜினிமுருகன். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் ரஜினிமுருகன் வளர்ந்து வருகிறது. மதுரை கதைக்களம். சிவ கார்த்தியேகன் நண்பன் சூரியுடன் இணைந்து நடத்தும் டீக்கடையின் பெயர்தான், ரஜினி முருகன். கீர்த்தி சுரேஷ் நாயகி.
ரம்ஜானுக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினி மாதிரியே 45 டிகிரி ஏறப்பார்வையில் தலையில் துண்டுகட்டி அட்டகாசமாக போஸ் தருகிறார் சிவ கார்த்திகேயன்.
இதுவும் சிவ கார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமையும் என்றுதான் பர்ஸ்ட் லுக் சொல்கிறது.
ரஜினி ஸ்டைலில் ரஜினிமுருகன் பர்ஸ்ட் லுக்
Views:
Category:
Kollywood
0 comments:
Post a Comment