சகாயம் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர். இவர் மதுரையில் கிரானைட் முறைகளை கண்டுபிடித்தது மற்றும் நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக்கியது உள்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார். அவரது அறிக்கையை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. சகாயம் பயங்கர தாதாக்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பல நூறு கோடிகள் இவற்றுக்கு அசைந்து கொடுக்காமல் பணியாற்றி வருகிறார்.
துணிச்சலான அவர் நடவடிக்கைகளால் தமிழ் நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார். தற்போது அவரது கதையை இயக்குனர் சமுத்திரகனி சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
சகாயம் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளாராம். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி தற்போது திரைக்கதை எழுதி வருகிறார். இதற்கான அனுமதியையும் அவர் சகாயத்திடம் பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாட்டை படத்தை தயாரித்த சாலோம் ஸ்டூடியோ தயாரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment