தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரியாசென். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் முன்னாள் இந்தி பட கதாநாயகி மூன்மூன் சென்னின் மகள் ஆவார்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தாய் மூன்மூன் சென்னுடன் ரியாசென் வசிக்கிறார். நேற்று இரவு வீட்டில் இருவரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நள்ளிரவில் இவர்கள் வீட்டில் திடீரென தீ பிடித்தது. கட்டில் மெத்தை, மரச்சாமான்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.
இவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பக்கத்து வீட்டுக்கும் பரவியது. ரியாசென்னும், மூன் மூன் சென்னும் விழித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் இருவரும் உயிர் தப்பினார்கள்.
விபத்து குறித்து தீயணைப்பு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து ரியாசென் கூறும்போது, படுக்கை அறையில் உள்ள ஏர்கண்டிஷனரில் தீ பிடித்து வீட்டில் பரவி உள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
0 comments:
Post a Comment