World

Music

Sports

Tuesday, 28 April 2015

ஸ்ரீதிவ்யா அறிமுகமான காட்டுமல்லி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதையடுத்து நடித்த நகர்ப்புறம் வெளியாகும்முன், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவர் நடித்தது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கா இப்படியொரு முன்னணி நடிகை அந்தஸ்து என்ற ஆச்சரியம் இன்னும் அவர் முகத்தில் வழிகிறது.

தனக்குப் பிடித்தமான நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர்களை சொல்லி வந்தவர் இப்போது சிவ கார்த்திகேயன் பெயரையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சிவ கார்த்திகேயனின் மார்க்கெட் படத்துக்குப் படம் அதிகரிப்பதைப் பார்த்து ஏற்பட்ட மாற்றம் இது.

இப்போதைய நடிகர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்றோ, பொருத்தமானவர் எவர் என்றோ ஸ்ரீதிவ்யாவிடம் கேட்டால், அசராமல் அவர் சொல்வது சிவ கார்த்திகேயனின் பெயரைதான்.

பிழைக்கத் தெரிந்தவர்.

அட, இது எப்போதிருந்து…?

By: Raja vj00 on: 19:01

தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் நடக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். அதேபோல் முன்பு செல்வராகவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவந்த அர்விந்த் கிருஷ்ணாவும் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் த்ரிஷா, தாப்ஸி என இரு நாயகிகள். படத்தின் போட்டோஷுட் விரைவில் சென்னையில் நடக்க உள்ளது.

செல்வராகவன், சிம்பு படம் – த்ரிஷா, தாப்ஸி நடிக்கிறார்கள்

By: Raja vj00 on: 18:55
லெஸ்பியனைப் போல் இன்னொரு பெண்ணுடன் அரைகுறை ஆடையில் நீது சந்திரா காட்சியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அவர் அறிமுகமான ட்ராபிக் சிக்னல் படம் தவிர்த்து மற்ற படங்களில் அதிக கவர்ச்சியுடன்தான் நீது சந்திரா நடித்தார்.
அதன் காரணமாகவே இந்தியில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தமிழில் ஒரேயொரு படம், அதுவும் ஆர்கேயுடன், வைகை எக்ஸ்பிரஸ்.
நாதிரா கொல்லப்பட்ட ராத்ரி என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் வைகை எக்ஸ்பிரஸ். இதில் நீது சந்திராவுக்கு இரு வேடங்கள்.
தென்னிந்தியாவில் மார்க்கெட் பிடிக்க கவர்ச்சியை ஆயுதமாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவராகவே தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கவர்ச்சியை ஆயுதமாக்கும் நீது சந்திரா

By: Raja vj00 on: 18:23

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி வெளிவந்த ‘காஞ்சனா 2-’ படம் கடந்த வாரம் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் திரில் கலந்த பயத்துடன் எடுத்திருந்தார். ஆகவே, இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும்போது அவ்வளவாக ரசிக்க முடியாவிட்டாலும், படத்தில் அப்பாடல்களை காட்சிப்படுத்திய விதத்தை வைத்து பார்க்கும்போது பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது.

அந்த வரிசையில் இந்த படத்திற்கென்று ப்ரோமோ பாடல் எதுவுமில்லாதது படக்குழுவினருக்கு பெரிய வருத்தமாக இருந்து வந்தது.

அதனால், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘சில்லாட்ட பில்லாட்ட’ என்ற பாடலை ப்ரோமோ பாடலாக மாற்றி லாரன்ஸ், நித்யா மேனன், டாப்ஸி மூவரும் நடனமாட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் இருவரும் இணைந்து நடனமாடியிருந்தனர். தற்போது இந்த பாடலில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன் மூவரும் இணைந்து நடனமாடவிருக்கின்றனர்.

காஞ்சனா-2 ப்ரோமோ பாடலுக்காக மீண்டும் படப்பிடிப்பில் களமிறங்கும் ராகவா லாரன்ஸ்

By: Raja vj00 on: 18:18

நடிகை ஊர்வசி முழுப் போதையில் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்த ஊர்வசி அங்கிருந்து முழுப் போதையில் கிளம்பியிருக்கிறார். அப்போது அவருக்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஊர்வசியை சமாதானப்படுத்தி காரில் அனுப்பி வைக்க அங்கிருந்தவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ஊர்வசியோ, அந்தாளுக்கு ஒரு மரியாத வேணும் என்று சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை யாரே போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். போதையில் இருந்த ஊர்வசியை ரொம்ப கஷ்டப்பட்டே காரில் அனுப்பி வைத்தனர்.

போதையில் தகராறு செய்த ஊர்வசி

By: Raja vj00 on: 18:11

இந்தியர்கள் உலக சினிமாக்களை அன்னாந்து பார்த்த காலம் மாறி, உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றுள்ளது மராத்திய திரைப்படமான ‘கோர்ட்’.

சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்குரைஞர் போராடுகிறார்.

இது நாயகன் இது வில்லன் என்பது போன்ற ஒற்றைத்தன்மையான காட்சி சித்தரிப்புகள் படத்தில் கிடையாது. சொல்லப்போனால் படத்திற்கு ஹீரோவே கிடையாது. காம்ப்ளே வழக்கைச் சுற்றியே படம் நகர்கிறது. படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான்.

கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கோர்ட்’ மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 17 விருதுகளைப் பெற்றுள்ளது. தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது கோர்ட்.

அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்:

By: Raja vj00 on: 18:07

நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– உங்களது சமீபத்திய படங்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறதே ஏன்?

பதில்:– ஒரு சினிமா படத்தை எடுப்பது எளிது. ஆனால் அதை ரிலீஸ் செய்வது கஷ்டமாக இருக்கிறது. என் படங்களுக்கு சிலர் தேவையில்லாமல் பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படி எதிர்ப்புகள் வருவது சரியல்ல. நான் யாருக்கும் எதிரான படங்கள் எடுக்கவில்லை. இங்கு இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான படங்களை நான் எடுக்க முடியுமா?

அதுபோல் முஸ்லிம், ஜெயின் உள்ளிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரான படங்களை எடுக்க மாட்டேன். இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் என் சகோதரர்கள் ஒரு குடும்ப உறுப்பினர்கள். எல்லோரும் ஒரே குடும்பத்தினர். எனவே எந்த மதத்துக்கும் எதிராகவோ அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ படம் எடுக்க மாட்டேன்.

என் படங்களை எதிர்ப்பவர்கள் மிக சிலர்தான். தொடர்ந்து என் படங்களுக்கு ஏன் பிரச்சினைகளை கிளப்புகிறார்கள் என்று புரியவில்லை. ‘உத்தம வில்லன்’ படத்துக்கு எதிரான வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அவர்களை வேதனைப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே:– உங்கள் படங்களுக்கு எதிர்ப்புகள் வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கிறார்களே?

ப:– என் ரசிகர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இத்தகு எதிர்ப்புகளை கண்டு கோபப்படவோ வருத்தப்படவோ கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டு இருங்கள்.

கே:– டி.டி.எச்.சில் படத்தை வெளியிடும் திட்டத்தை கைவிட்டு விட்டீர்களா?

ப:– அந்த முயற்சியை கைவிட மாட்டேன். அதற்கு போதிய ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.

கே:– உத்தமவில்லனில் பாலசந்தர் நடித்து இருப்பது பற்றி?

ப:– பாலசந்தர் என் குருநாதர். அவர் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறேன். அவரும் டைரக்டர் கே.விஸ்வநாத்தும் இந்த படத்தில் நடித்து உள்ளனர். இது பெருமையாக இருக்கிறது. இரு இயக்குனர்களும் ஆராதனைக்கு உரியவர்கள்.

கே:– உத்தமவில்லன் என்ன கதை?

ப:– ஒரு நடிகனின் வாழ்க்கையே இப்படத்தின் கதை. இதில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். எனக்கு முக்கியமான படம் இது. ஒரு குரூப் நடன காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் சினிமாவின் தெளிவு இப்படத்தில் இருக்கும்.

கே:– கதாநாயகிகள் பற்றி?

ப:– ஆண்ட்ரியாவும், பூஜாகுமாரும் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே ஸ்ரீதேவியுடன் 24 படங்களிலும், ஸ்ரீப்ரியாவுடன் 27 படங்களிலும், குஷ்புவுடன் ஆறேழு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

கே:– அறுபது வயதிலும் இளமையாக இருக்கிறீர்களே எப்படி?

ப:– மனதுதான் காரணம். வயது என்பது உடம்புக்குதான். மனதுக்கு அல்ல.

என் படங்களுக்கு எதிர்ப்புகள் தொடர்கிறது: கமலஹாசன் பேட்டி

By: Raja vj00 on: 18:05

விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘என் உதிரத்தின் விதை’ என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.

இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செலுத்தி, அவற்றை வழிபடுவது வழக்கம். இந்து மத கடவுள், அதர் மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளனர். இவற்றை எல்லாம் அவமதிக்கும் விதத்தில், இந்த பாடல்கள் உள்ளன.

எனவே, இந்த என் உதிரத்தின் விதை என்று தொடங்கும் பாடலில், வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று திரைபட தணிக்கை வாரியத்தின் தலைவர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6-ந் தேதி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், வருகிற மே 1-ந் தேதி ‘உத்தமவில்லன்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘உத்தமவில்லன்’ படத்தை வெளியிட தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தடைகளை உடைத்தெறிந்த கமலின் உத்தமவில்லன்

By: Raja vj00 on: 08:30

மாஸ் படத்தின் டீஸரை இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சரி, அது என்ன சிக்ஸர்?

வெங்கட்பிரபு தனது முதல் படம், சென்னை 28 படத்தை, ஏ வெங்கட்பிரபு ஃபிலிம் என்று அழைத்தார். இரண்டாவது படம் சரோஜாவை ஏ வெங்கட்பிரபு மூவி என்றார். கோவா ஏ வெங்கட்புரபு டயட், மங்காத்தா ஏ வெங்கட்புரபு கேம், பிரியாணி ஏ வெங்கட்பிரபு டயட்.

மாஸ் படம், ஏ வெங்கட்பிரபு சிக்ஸர். படம் சூப்பர்ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் சிக்ஸர் என்று வைத்திருக்கிறார். மேலும், மாஸ் வெங்கியின் ஆறாவது படம் என்பதும் முக்கியமானது.

வெங்கட்பிரபுவின் சிக்ஸரைப் பார்த்த எட்டு லட்சம் பேர்

By: Raja vj00 on: 08:25

காக்கி சட்டைக்குப் பிறகு சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படம், ரஜினிமுருகன். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் ரஜினிமுருகன் வளர்ந்து வருகிறது. மதுரை கதைக்களம். சிவ கார்த்தியேகன் நண்பன் சூரியுடன் இணைந்து நடத்தும் டீக்கடையின் பெயர்தான், ரஜினி முருகன். கீர்த்தி சுரேஷ் நாயகி.

ரம்ஜானுக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினி மாதிரியே 45 டிகிரி ஏறப்பார்வையில் தலையில் துண்டுகட்டி அட்டகாசமாக போஸ் தருகிறார் சிவ கார்த்திகேயன்.

இதுவும் சிவ கார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமையும் என்றுதான் பர்ஸ்ட் லுக் சொல்கிறது.

ரஜினி ஸ்டைலில் ரஜினிமுருகன் பர்ஸ்ட் லுக்

By: Raja vj00 on: 08:24

தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை கவரும் விதத்தில் பாலிவுட்டில் முன்னணி இணையத்தளம் ஒன்று தென்னிந்திய சூப்பர் ஸ்டார் யார் என்று கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் அஜித் 51% மேல் வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதை தங்கள் ’தல’க்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறோம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு

By: Raja vj00 on: 04:03

ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்டவர்கள் விஜய், அஜித் தான். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழா தற்போது சமூக வலைத்தளங்களில் கேலி கூத்தாக மாறியுள்ளது.

இது குறித்து சமீபத்தில் வந்த தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. Favorite பிரிவில் பெரும்பாலும் அஜித் அல்லது விஜய் தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்து வந்த நிலையில், ரஜினிக்கு கிடைத்தது இரண்டு தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், முதலில் இந்த பட்டியலில் விஜய், அஜித் பெயர் தான் முன்னணியில் இருந்ததாம், ஆனால், அஜித் எந்த விழாவிற்கும் வரமாட்டர் என்று அனைவருக்கும் தெரியும், அதேபோல் விஜய்யும் வரமறுக்க அதனால் தான் விருது மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்படுகிறது. இதில் காமெடி என்னவென்றால் ரஜினியும் விருது வாங்க வரவில்லை.

விருதை வாங்க மறுத்த தலதளபதி- வெளிவந்த அதிர்ச்சி தகவல்

By: Raja vj00 on: 04:00

Monday, 27 April 2015

இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பல பாலிவுட் இணையத்தளங்கள் தென்னிந்திய நடிகர்களை குறி வைத்தே கருத்து கணிப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பாலிவுட் இணையத்தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தினர்.

இதில் விஜய், அஜித், பவன் கல்யான், ரவிதேஜா, மம்முட்டி, மோகன் லால், ரஜினி, கமல் என பலரும் இருக்க, தற்போது வரை முதலிடத்திற்கு விஜய், அஜித் இருவருக்குமிடையே தான் கடும் போட்டி.

தற்போது வரை விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். இதன் ரிசல்ட் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார்? கருத்து கணிப்பு தகவல்கள்

By: Raja vj00 on: 22:43

சகாயம் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர். இவர் மதுரையில் கிரானைட் முறைகளை கண்டுபிடித்தது மற்றும் நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக்கியது உள்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார். அவரது அறிக்கையை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. சகாயம் பயங்கர தாதாக்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பல நூறு கோடிகள் இவற்றுக்கு அசைந்து கொடுக்காமல் பணியாற்றி வருகிறார்.

துணிச்சலான அவர் நடவடிக்கைகளால் தமிழ் நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார். தற்போது அவரது கதையை இயக்குனர் சமுத்திரகனி சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

சகாயம் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளாராம். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி தற்போது திரைக்கதை எழுதி வருகிறார். இதற்கான அனுமதியையும் அவர் சகாயத்திடம் பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாட்டை படத்தை தயாரித்த சாலோம் ஸ்டூடியோ தயாரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை சினிமாவாகிறது

By: Raja vj00 on: 08:54

விஜய் TV  வருடா வருடம் சினிமா கலைஞர்களுக்காக விருது விழா ஒன்றை நடத்தி வருகிறது. இந்த வருடம் 9ம் ஆண்டை எட்டியுள்ளதால் மக்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்த விழா பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்று முடிந்தது. இதில் விருதுகளை வென்றது யார் யார்  என்பது  உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Winners list of 9th Annual Vijay Awards 2015

Best Film – Velai Illa Pattathari

Best Director – Kathik Subbaraj for ‘Jigarthanda’

Best Actor – Dhanush for ‘Velai Illa Pattathari’

Best Actress – Amala paul for ‘Velai Illa Pattathari’

Best Supporting Actor – Kalai Arasan for ‘Madras’

Best Supporting Actress – Seetha for ‘Golisoda’

Best Comedian – Thambi Ramaiyya for ‘KTVI’

Best Villain – Bobby Simha for ‘Jigarthanda’

Best Debut Actor – Dulquer Salmaan for ‘Vaaya Mudi Pesavum’

Best Debut Actress – Malavika Nair for ‘Cuckoo’

Best Supporting Child Artist – Sara for ‘Saivam’

Best Music Director – Anirudh for ‘Velai illa pattathari’

Best Background Music – Santhosh Narayanan for ‘Jigarthanda’

Best Cinematographer – Shobi for ‘Jeeva’

Best Editor – Vivek Harsan for ‘Jigarthanda’

Best Art Director – Sabu Cyril for ‘Lingaa’

Best Male Playback Singer – Pradeep for ‘Madras’

Best Female Playback Singer – Utthra Unnikrishnan for ‘Saivam’

Best Lyricist – Kabilan for ‘Yaan’

Best Story, Screenplay Writer – Vijay Milton for ‘Golisoda’

Best Choreographer – Shobi for ‘Jeeva’

Best Stunt Director – Supreme Sundar for ‘Golisoda’

Best Make Up – Pattinam Rashid for ‘Kaaviya Thalaivan’

Best Costume Designer – Perumal and Niranjani Agathiyan for ‘Kaaviya Thalaivan’

Best Find of the Year – Raja Murugan for ‘Cuckoo’

Best Crew – Sathurangavettai

Speci Jury Award – Soundarya Rajinikanth for ‘Kochadaiyaan’

Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema - Not Announced

Best Contribution to Tamil Cinema – AVM Saravanan

Favorite Awards :

Favorite Hero – Superstar Rajinikanth for ‘Lingaa’

Favorite Heroine – Hansika for ‘Maan Karate’

Favorite Film – Kaththi

Favorite Director – AR Murugadoss for ‘Kaththi’

9TH விஜய் அவாட்ஸ்-ன் வெற்றியாளர் பட்டியல்

By: Raja vj00 on: 03:01

Sunday, 26 April 2015

கத்தி படம் விஜய் நடிப்பில் கடந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் பிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் பல விருதுகளை வென்றது.

இதில் பேவரட் இயக்குனர் என்ற விருதை முருகதாஸ் வென்றார். விருதை பெற்று இவர் ‘விஜய் சார் இப்போது என்னுடன் இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது.

மேலும், விஜய் படத்தில் மட்டும் தான் என் முகத்தை திரையில் காட்டுவேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விஜய் படத்தில் மட்டும் தான் செய்வேன் - நெகிழ்ச்சியுடன் முருகதாஸ்

By: Raja vj00 on: 22:26

ஐ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும், அந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது என்றும் கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வெளிவந்தன. உண்மையேலே இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டியதாம்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது இந்தி திரைப்படமான 3 இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார். இதற்காக ஷங்கரும் ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால், லிங்கா திரைப்படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் ஷங்கருடன் மாஸ் கூட்டணி வைக்க திட்டமிட்ட ரஜினிகாந்த், போன் மூலம் ஷங்கருக்கு தகவல் கூறியுள்ளார். இதையடுத்து தனது பிளானை மாற்றிய ஷங்கர், ரஜினி இமேஜுக்கு தக்கபடி திரைக்கதையை மாற்றியதாக கூறப்படுகிறது.

எனவே இப்படத்தில், கமலை வில்லனாக நடிக்க கேட்டுள்ளார் ஷங்கர். ஆனால், அவர் மறுக்கவே, மீண்டும் தனது பழைய பிளான்படி விக்ரமை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஒரே ஒரு போன் காலில் முறிந்த ஷங்கர்-விஜய் கூட்டணி..!

By: Raja vj00 on: 21:00

 

Our Team Members

Copyright © Tamil Sex Videos | Designed by Templateism.com | WPResearcher.com